தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியாக கொடைக்கானலில் 99.2% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறுகையில், கொடைக்கானல் நகர் பகுதியில் 99.2 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதேபோல கிராமப் பகுதிகளிலும் 55 சதவீதம் நபர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டு நாட்களாக புதிய தொற்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் குறைந்துள்ள நிலையில், கொடைக்கானலை கொரோனா இல்லாத நகராக அறிவிப்பதுடன் நகர் பகுதி மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தையும் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







