முக்கியச் செய்திகள் இந்தியா லைப் ஸ்டைல் Health

சுட்டெரிக்கும் வெயில் – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதும், அதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 26 நாட்கள் வெப்ப அலை வீசிய நாட்களாக கணிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வெப்ப அலையை இந்தியா எப்போது அறிவிக்கிறது?

சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாகவும், மலைப் பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாகவும் வெப்பத்தின் அளவு இருக்குமானால் அத்தகைய தினங்களே வெப்ப அலை நாட்களாக கணிக்கப்படுகின்றன.

சமவெளிப் பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக வெப்பம் இருக்குமானால், அத்தகைய நாட்கள் தீவிர வெப்ப அலை நாட்களாக கணிக்கப்படுகின்றன.

இதேபோல், வீசும் காற்றில் 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்குமானால் அது வெப்பஅலை என்றும், 6.4 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருக்குமானால் அது தீவிர வெப்ப அலை என்றும் அழைக்கப்படுகிறது.

வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை குறித்தும் செய்யக்கூடாதவை குறித்தும் மத்திய சுகாதாரத்துறை சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

செய்ய வேண்டியவை:
1. வீட்டிற்குள் இருக்க வேண்டும் / நிழலில் இருக்க வேண்டும்
2. வெளியில் செல்ல நேர்ந்தால் குடை / தொப்பி / துண்டு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்
3. மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்
4. தண்ணீர், உப்பு சேர்க்கப்பட்ட லஸ்ஸி, எலுமிச்சை சாறு, பழச்சாறு, ORS ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்; தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களை உண்ண வேண்டும்
5. அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், இருப்பிடத்தின் வெப்பத்தை குறைக்க தண்ணீர் தெளிக்க வேண்டும், காற்றோட்டமான அறைக்குள் இருக்க வேண்டும், ஃபேன், கூலர், ஏசி ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
6. வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்; குளிர்ச்சியான இடத்தில் இருக்க வேண்டும்; குறைந்த ஆடைகளையே அணிய வேண்டும்.

செய்யக்கூடாதவை:
1. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லக்கூடாது
2. மதிய வேளையில் வெளியில் இருக்கும்போது கடுமையான செயல்களைச் செய்யக்கூடாது
3. மது, தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றை குடிக்கக்கூடாது
4. நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் குழந்தைகளை விட்டுச் செல்லக்கூடாது
5. அடற் நிற ஆடைகள், செயற்கை நூலிழையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இறுக்கமான ஆடைகள் ஆகியவற்றை அணியக்கூடாது

  • பால. மோகன்தாஸ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேஸ் சிலிண்டர் விலையுயர்வு; ராகுல் காந்தி கண்டனம்

Halley Karthik

‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!

Halley Karthik

மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Halley Karthik