குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. 15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும்…

15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

15-வது ஐ.பி.எல்-ன் 48வது போட்டி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், கேப்டன் பாண்டியா 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘இன்டர்நெட் இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை செய்வது எப்படி?’

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், அதிரடியாக விளையாடிய ராஜபக்சா குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தவானும் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

இதன்மூலம், குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் குஜராத் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.