கோடையில் தலைமுடி வறண்டு காணப்படுவது என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான பிரச்னையாக இருக்கும். அதிலிருந்து தற்காத்து கொள்ளவது பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. கோடை காலங்களில் நீளமாக முடி வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. முடி நீளமாக இருந்தால் அதை பாராமரிப்பது என்பது கடினமாக செயலாக இருக்கும்.
2. தினமும் தலைக்கு குளித்த பிறகு முடியில் தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும். இதன்மூலம் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
3. மாதத்திற்கு ஒருமுறை hair spa செய்து கொள்வதன் மூலம் முடி வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.
4. வெயில் நேரங்களில் வெளியில் செல்லும் போது தலையில் துணி கட்டி கொள்வது, தொப்பி அணிந்து செல்வதன் மூலம் சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து முடியை பாதுகாக்க முடியும்.
5. தலைமுடியில் தினமும் hair serum தடவுவதன் மூலம் முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

6. தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற பொருட்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்.
7. சரியான நேரத்தில் முடியின் நுனிப்பகுதியை வெட்டுவதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும்.
8. அதிக வெப்பம் தரும் பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். hair Straightner, hair dryer etc..
9. முடி பராமரிப்பு, கலரின் போன்றவைகளை வீட்டில் செய்வதை தவிர்த்து சலூன்களில் செய்ய வேண்டும்.
10. ஒரு வாழைப்பழம், சிறிதளவு பால் ஆகியவற்றை ஒன்றாக்கி மிக்சியில் அடித்து அதை ஒரு மாஸ்காக தலைமுடியில் தடவ வேண்டும். 30 நிமிடங்களுக்கு பின் shampoo போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்வதன் மூலம் முடி வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.







