முக்கியச் செய்திகள் தமிழகம்

பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வு

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்த்தி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பருத்தி தட்டுப்பாடு காரணமாக நூல் விலை கடந்த சில மாதங்களாக கடும் விலை விலை ஏற்றம் அடைந்து வருகிறது. தற்போது கேண்டி ரூ.400 முதல் ரூ.470 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில் துறை சார்பில் பல்வேறு கடிதம் மூலமும், நேரிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன் கூறுகையில், இந்த மாதமும் நூல் விலை 40 ரூபாய் வரை உயர்ந்திருக்கும் சூழ்நிலையில் தென்னிந்திய நூல் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில்,  பின்னலாடை உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான நூல் விலை ஏற்றத்தின் காரணமாக பின்னலாடை உற்பத்தி தொழில் முடங்க கூடிய சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது 15 சதவீதம் விலை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், மேலும் நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பஹத் பாசிலுடன் மோதும் கவுதம் மேனன்..

Vel Prasanth

மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

அமேசான் ப்ரைமில் வெளியாகும் ரஞ்சித்தின் ’சார்பட்டா’

Vandhana