உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தை Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் மேற்கொண்யுள்ளனர். இந்நிலையில், “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








