மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயாதீன மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயாதீன மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை தெரிவித்தார். அவர் கூறும்போது, 15 வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 19 லட்சத்து 7ஆயிரத்து 9 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 8 கோடியே 4 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழா, ஜனவரி 12ம் தேதி நடைபெற உள்ளதாக கூறிய அவர், இந்த விழாவில் சிறப்பு அழைப்பாள ராக பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவர்கள் இணையதளம் வழியாக காலை 10 மணி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

எம்பிபிஎஸ் படிப்புக்கு 6ஆயிரத்து 958 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்புக்கு ஆயிரத்து925 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.