33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஒன்றாக விளையாட வாய்ப்பு? ரோஹித் சர்மா விளக்கம்!

கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த உலகக் கோப்பை தொடரானது, சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில். இந்நிலையில், தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.இதில்  ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ராகுல், இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஆமாம். வாய்ப்பு இருக்கிறது. இஷான் கிஷன் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் முன்பு பலவிதமான காரணிகள் உள்ளன. அதை பார்த்துதான் தேர்வு செய்வோம். அந்த நேரத்தில் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முடிவு எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆசியக் கோப்பையில் 2 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட உள்ளார். நம்பர் 5-ல் ராகுலின் சராசரி சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷன் இஷான் கிஷனும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார்.

ஆனால் யார் எந்த வரிசையில் விளையாடுவார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. கே.எல்.ராகுல் ராகுல் 54 போட்டிகளில் 1986 ரன்களும் சராசரி 45.13ஐயும் கொண்டுள்ளார். இஷான் கிஷன் 19 போட்டிகளில் 776 ரன்களும் சராசரி 48.50ஐயும் கொண்டுள்ளார். இருவரும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி…

Web Editor

அரசியலில் சசிகலா 2.0..?

G SaravanaKumar

ஐபிஎல் போட்டி : CSKவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி..!!

Web Editor