ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் 5,900 மாணவ, மாணவிகள் நிகழ்த்திய மாபெரும் உலக சாதனை..!

அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 5,900 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரிதமிக் முறையில் 10 நிமிடங்கள் கைகளை தட்டி உலக சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரிதமிக்…

அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 5,900 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரிதமிக் முறையில் 10 நிமிடங்கள் கைகளை தட்டி உலக சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரிதமிக் முறையில் 10 நிமிடங்கள் கைகளை தட்டி உலக சாதனை நிகழ்த்தினர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வில் அருப்புக்கோட்டை உள்ள எஸ்.பி.கே கல்வி நிறுவனங்கள் சார்பில் 5,900 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ”Einstein World Records” நிர்வாகிகள் முன் இந்த உலக சாதனை நிகழ்வை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். மாணவர்களின் உடல் நலத்தை மேம்பாடுத்தும் விதமாகவும், அறிவாற்றலை அதிகரிக்க செய்யும் விதமாகவும் ரிதமிக் முறையில் இடைவிடாது தொடர்ந்து 10 நிமிடங்கள் கைகளை தட்டி சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.பள்ளி மைதானத்தில் We Love Our Teacher எனும் எழுத்து வடிவில் 5,900 பள்ளி, மாணவர்கள் நின்று உலக சாதனை நிகழ்வை நடத்தினார்கள். உலக சாதனை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை Savyan Technology, புதுமை தமிழச்சி மற்றும் எஸ்.பி.கே கல்வி நிறுவனங்கள் செய்திருந்தன.

மேலும் உலக சாதனை நிகழ்வில் News 7 Tamil Media Partner ஆக பங்கெடுப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை நாடார் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்று உலக சாதனை நிகழ்வுக்கான சான்றிதழ்களை வழங்கினார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.