பிரஷித் கிருஷ்ணாவின் வைட் யார்க்கர்களை, அம்பயர் நிதின் பண்டித் தொடர்ந்து வைட்-பால் என்று கூறியதால் பந்து வீச்சாளாரும், கேப்டன் சஞ்சு சம்சனும் கடும் விரக்தியடைந்தனர்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் குஜராத், லக்னோ அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. சாம்பியன் அணிகளான சென்னை, மும்பை அணிகள் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில், புதிதாக வந்துள்ள குஜராத், லக்னோ அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
ஃபார்ம் அவுட்டில் இருந்த குல்தீப் யாதவ் – டெல்லி அணி, உமேஸ் யாதவ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். திலக் வர்மா – மும்பை அணி, அபிஷேக் மற்றும் உமர் மாலிக் – ஹைதராபாத், முகேஷ் சவுத்ரி – சென்னை அணி போன்ற புதிய வீரர்கள் கவனம் ஈர்த்து வரகின்றனர். மிக முக்கியமாக நடுவர்களின் தீர்ப்பு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
கடந்த வாரம் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ரெளமன் பெளலுக்கு உயரம் காரணமாக நோ பால் வீசப்பட்டது. அப்போது, அம்பயர் அதை நோ பால் என்று சொல்லாததால் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். கேப்டன் ரிஷப் பன்ட் பெளண்ட்ரி லைனில் இருந்து ஆக்ரோஷமாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் நேற்று ராஜஸ்தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியிலும் அம்பயரின் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
https://twitter.com/sumitganguly191/status/1521186232893865984
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 152/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், 19ஆவது ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராஜஸ்தான் அணியின் பிரஷித் கிருஷ்ணா பந்து வீசினார். அதில், முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் மட்டும் கொடுத்து 3வது பந்தில் ஷாட் எதுவும் அடித்துவிடக் கூடாது என்பதற்காக அதை ஸ்டம்புக்கு அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டுக்கு மேல் வீசினார். அப்போது, ரின்கு சிங் சற்று இடதுபுறமாக நகர்ந்து பந்தை அடிக்க முயற்சித்தார். ஆனால், ரன் எதுவும் எடுக்கவில்லை. இதை வைடுபால் என நடுவர் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியடையத் செய்தது.
19ஆவது ஓவர் முழுவதும் பிரஷித் கிருஷ்ணாவின் வைட் யார்க்கர்களை, அம்பயர் நிதின் பண்டித் தொடர்ந்து வைட்-பால் என்று கூறியதால் பந்து வீச்சாளாரும், கேப்டன் சஞ்சு சம்சன் கடும் விரக்தியடைந்தனர். இதனால், போட்டியின் வெற்றியே கடைசி நேரத்தில் மாறியது . அம்பயரின் தவறான முடிவால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதாக ராஜஸ்தான் ரசிகர்கள் இணையதளத்தில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.









