சென்னையில் விதிகளை மீறி வாகனங்களில் மாற்றங்களை செய்திருந்த 607 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உட்பட பல நகரங்களில் சாலை விதி மீறல் மற்றும் வாகனங்களில் விதி மீறல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் விதிகளை மீறி பல்வேறு மாற்றங்கள் வாகனங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாற்றங்கள் பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூராக இருப்பதாக அதிக அளவில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்திய வாகனங்களை வைத்திருந்ததாக 163 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், மியூசிக்கல் ஹாரன் பொருத்திய வாகனங்களை வைத்திருந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்திய வாகனங்களை வைத்திருந்ததாக 103 பேர் மீதும், விதிகளை மீறிய வடிவங்களில் நம்பர் பிளேட் பொருத்தியிருந்த வாகனங்களை வைத்திருந்ததாக 291 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








