துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில், ரொமான்ஸ் ஹீரோவாக பார்த்து ரசித்த துல்கர் சல்மான், முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஏற்கனவே ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான’ கலாட்டாக்காரன்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில், ராஜு என்கிற ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியான நேரத்திலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.







