பழனியில் முதுகில் அலகு குத்தி காரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய முருகபக்தர்..!

பழனி கோயிலில் முருகபக்தர் ஒருவர் தனது முதுகில் அலகு குத்தி மறுமுனையில் காரை இழுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய…

பழனி கோயிலில் முருகபக்தர் ஒருவர் தனது முதுகில் அலகு குத்தி மறுமுனையில் காரை இழுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர். இவர்களில் ஏராளமான பக்தர்கள் மயில்காவடி, பால்காவடி, சர்க்கரை காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அதேபோல ஏராளமானோர் உடலில் அலகு குத்தியபடி நடந்துவந்தும், ஆகாயத்தில் தொங்கியபடி பறவை காவடியில் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே அத்தன்வலசு கிராமத்தை சேர்ந்த கருப்பணன் என்ற முருக பக்தர் ஒருவர் உலக மக்கள் நலன் வேண்டி நேர்த்திக்கடன் ஒன்றை செலுத்தினார்.

அவர் தனது முதுகில் அலகு குத்தி மறுமுனையில் கயிற்றால் மாருதி வேனை கட்டி இழுத்தபடி கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார். இவர் சண்முகநதியில் புனிதநீராடி அங்கிருந்து முதுகில் அலகு குத்தி மாருதிவேனை இணைத்து இழுத்து சென்று சாமிதரிசனம் செய்தார். இவருடன் அவரது உறவினர்கள் மேளதாளம் முழங்க பக்தி பாடல்கள் பாடியபடி நடந்து சென்றனர். முதுகில் அலகு குத்தி காரைஇழுத்து சென்ற பக்தரை பலரும் பார்த்து பரவசமடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.