சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள ரீலில் இனி நீங்கள் 90 விநாடிகள் வரை வீடியோவை ரெக்கார்டு செய்யலாம். இதற்கு முன்பு 60 விநாடிகள் வரை தான் ரீலில் வீடியோ பதிவு செய்யும் வசதி இருந்தது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. டிக் டிாக்குக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட பிறகு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை தான் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ரீல்ஸில் முதல் முறையாக வீடியோ பதிவு செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெம்ப்ளேட்டுகள், ஸ்டிக்கர்கள், சவுண்ட் எஃபெக்ட்டுகள், உங்களுடைய சொந்த ஆடியோவையும் பதிவேற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்தமாக பயனருக்கு நல்ல அனுபவத்தை தருவதற்காக பல்வேறு அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் சேர்த்துள்ளது. தங்களுடைய கதைகளை வீடியோ வாயிலாக இந்த உலகத்துக்கு பயனர்கள் தெரியப்படுத்துவதற்காக 60 விநாடிகளில் இருந்து 90 விநாடிகள் வரை கால நீட்டிப்பு செய்து வசதியை மெருகேற்றியிருக்கிறோம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.








