நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான “குஷி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஷி’. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் பாடல் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் இந்த படத்தின்டைட்டில் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/TheDeverakonda/status/1684574970515693568?s=20
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







