முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சினிமா

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் குஷ்பு!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு பாஜகவினரும் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதைக் குறித்து பேசிய குஷ்பு, ”எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பேன். நிறைய பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே சொல்ல பயப்படுகின்றனர். பயப்படாதீர்கள், வெளியே வாருங்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

இதனைத் தொடர்ந்து, நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நிஷாந்த், தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஷ்பு சுந்தருடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது பேசிய குஷ்பு, “மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியை, தமிழ்நாடு அரசு முறையாக செலவு செய்யவில்லை. பெண்களுக்காக இன்னும் அதிகமாக குரல் கொடுப்பேன்.

பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் விமர்சனங்களுக்கு நிச்சயம் குஷ்பு எப்போதும் பயந்தவர் அல்ல” என தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் இன்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றுக் கொண்டார்.

குஷ்பு நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் முழு வீடியோவைக் காண :

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..

Nandhakumar

திரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை

Halley Karthik

கலெக்ஷனில் கலக்கும் ‘காந்தாரா’ – ரூ.400 கோடியை கடந்து சாதனை

EZHILARASAN D