முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை “கோஸ்தா−2” வைரஸ் கண்டுபிடிப்பு…

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை “கோஸ்தா−2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சீனா வூகான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அது உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிய வகை கொரோனா வைரஸை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. ரஷ்ய வெளவால்கள் மூலம் பரவும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு “கோஸ்தா−2” என அமெரிக்க விஞ்ஞானிகள் குழு பெயர் சூட்டியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வெளவால்கள் மூலம் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதன் மூலம் அடையும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று முடிவுக்கு வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை “கோஸ்தா−2” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர். பிரக்யா யாதவ் கூறுகையில், “ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ள, ‘கோஸ்தா−2’ ( SARS-COV2) வைரஸால் தற்போது வரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே போடப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி இதை கட்டுப்படுத்துமா என்று இனிதான் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ஜிகா, நிபா, குரங்கு அம்மை, கோவிட் 19 போன்ற பல பெருந்தொற்றுகளை எதிர்கொண்ட அனுபம் உள்ளது. எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லைக் கண்ணன் மனு; விசாரணை ஒத்திவைப்பு

Halley Karthik

டி20 போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

G SaravanaKumar

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

Niruban Chakkaaravarthi