ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆறு மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறு மாத குழந்தை கடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து, பர்தா அணிந்த பெண், குழந்தையை எடுத்துச் செல்வது போல சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து, குழந்தையைக் கடத்திய நபரைப் பிடிக்கவும், குழந்தையை மீட்கும் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் எனவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா