முக்கியச் செய்திகள்செய்திகள்சினிமா

’KH234’ படத்தின் தலைப்பு ”ThugLife” : வைரலாகும் டைட்டில் வீடியோ!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள “KH 234″ திரைப்படத்தின் பெயர் ”ThugLife” என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.  படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்,  கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த வீடியோ கமலின் பிறந்த நாளான நவ.7-ல் (நாளை) வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து ராஜ் கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

இதனிடையே கமல்ஹாசனின் 234வது படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,  இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிக்க இருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அனல்பறக்கும் காட்சிகளுக்கு ஊடே கமல்ஹாசன் பேசும் ஒவ்வொரு வரிகளும் ரசிகர்களுக்கு மந்திரமாகவே அமையும்படி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ ஒரு பெரிய விசுவல் விருந்தாகவே அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Thug Life | KH234 | Title Announcement Video | Kamal Haasan | Mani Ratnam | AR Rahman | RKFI |MT |RG
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தொழில் அதிபர் மீது பாலியல் புகார்: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை

Web Editor

டீம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி!… படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு?…

Web Editor

10 வேளாண் பொருட்களுக்கு புவீசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading