நாமக்கலில் சிறுமியை கடத்திய மர்ம நபர்கள்

நாமக்கலில், தாய் மற்றும் அண்ணனை கட்டி போட்டு விட்டு மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல், காளிச்செட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் மெளலிசனாவை நேற்று அதிகாலை 1.30…

நாமக்கலில், தாய் மற்றும் அண்ணனை கட்டி போட்டு விட்டு மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல், காளிச்செட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் மெளலிசனாவை நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். சிறுமி மெளலிசனா, தாய் கெளசல்யா மற்றும் அண்ணன் ஜெய்சனுடன் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, இருவரையும் கட்டி போட்டு விட்டு மர்ம நபர்கள் சிறுமியை தூக்கி சென்றுள்ளனர்.

கடத்திச் சென்ற நபர்கள், ரூ.50 இலட்சம் பணம் கேட்டு போனில் மிரட்டல் விடுத்த நிலையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மர்ம நபர்கள் அலங்காநத்தம் பிரிவு சாலையில் சிறுமி மெளலிசனாவை விட்டு விட்டு சென்றுள்ளனர். சிறுமியை மீட்ட போலீசார், பெற்றோர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.

அண்மைச் செய்தி: ‘பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருகிறது – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி’

அதனைத்தொடர்ந்து, சிறுமியை கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், சிறுமியை கடத்தி விவகாரத்தில் என்.புதுக்கேட்டையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்னுமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பொன்னுமணி ஆண் வேடத்தில் சென்று சிறுமியை கடத்தியதும், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.