வாரிசு படத்திற்கு இசை அமைக்கும் போது கீ போர்ட் உடைந்தது என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்னும் சற்று நேரத்தில் மாலை 5:30 மணி அளவில் தொடங்கியது.
முன்னதாக நேரு உள் விளையாட்டு அரங்கு வெளியில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை. மேளம் தளம் முழங்க பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடி வந்தனர். அதிக ரசிகர்கள் குவிந்ததால் லேசான தடி அடி நடத்தி ரசிகர்களை காவல்துறை துரத்தியது. இந்தனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காட்ச்சியளித்தது.
விழாவில் இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் மேடையில் பேசுகையில், 27 ஆண்டு காத்திருப்பு இது. எனது விருதுகளை விட உங்களுடைய இந்த வரவேற்பு தான் எனக்கு பெரியது. நான் ஒரு விஜய் வெறியன். கீ போர்ட் உடைந்ததா என கேட்டார்கள் ஆமாம் உடைந்தது என்றார்.
என்னுடைய பையன் தான் எனக்கு அதிக அழுத்தம் கொடுத்தான். ஒழுங்கா பாட்டை போடு இல்லை என்றால் பள்ளியில் என்னை கிண்டல் செய்வார்கள் என என் பையன் தான் எனக்கு அதிக அழுத்தம் கொடுத்தான். பாட்டை போட்டு அவனிடம் காட்டுவேன் என கூறினார்.
வம்சி கொடுத்த சப்போர்ட் தான் பாடல் இந்த அளவுக்கு வந்துள்ளது. எல்லாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.சென்னையில் பிறந்து வளர்ந்து இன்று தான் வாழ்க்கை நிறைவு பெற்றது. இன்னும் கொஞ்ச நேரம் பேசினால் நான் அழுது விடுவேன். மற்ற நடிகர்கள் உடன் நான் பண்ண பாடலை கேட்டு யார் கால் பண்ணி சொல்லுவார்கள். அவர் கால் செய்து கிழித்து விட்டீர்கள் என்று சொன்னார். நான் கொஞ்சம் குண்டாக தான் இருக்கேன் என் பேசினார்.
தீ தளபதி பாடல் கேட்ட உடன் சிம்பு தான் பாட வேண்டும் என அவரை வைத்து பாட வைத்தேன். சிம்பு வாய்ஸ் கேட்க வேண்டும் என்று தான் அந்த பாடலை பாட வைத்தேன்.
அனிருத் குரலில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளேன் எனவும் அவர் பேசினார்.