என்னுடைய ரசிகர்களுக்காக நான் செய்வது அதனால் சிறப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் விஜய் சொன்னதாக நடன இயக்குநர் ஜானி பேசினார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்னும் சற்று நேரத்தில் மாலை 5:30 மணி அளவில் தொடங்கியது.
முன்னதாக நேரு உள் விளையாட்டு அரங்கு வெளியில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை. மேளம் தளம் முழங்க பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடி வந்தனர். அதிக ரசிகர்கள் குவிந்ததால் லேசான தடி அடி நடத்தி ரசிகர்களை காவல்துறை துரத்தியது. இந்தனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காட்ச்சியளித்தது.
விழாவில் இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து நடன இயக்குனர் ஜானி மேடையில் பேசுகையில், ரஞ்சிதமே பாடலில் 1 நிமிடம் 20 நொடிகள் விடாமல் ஒரே ஷாட்டில் ஆடி முடித்தார் நடிகர் விஜய். இந்த பாடல் என்னுடைய ரசிகர்களுக்காக நான் செய்வது அதனால் சிறப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் சொன்னதாக பேசினார்.







