சென்னை-கெவாடியா இடையே புதிய விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை இன்று முதல் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல்-கெவாடியா இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக எம்பி . நவநீதகிருஷ்ணன், திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




