ஆசையாக சாப்பிட்ட பரோட்டா; தொண்டையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

பரோட்டா சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பூப்பாறை சூண்டலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கட்டப்பனா மற்றும் சுற்றுவட்டார…

பரோட்டா சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பூப்பாறை சூண்டலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கட்டப்பனா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு உரம் ஏற்றி வரும் லாரியில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் உரம் இறக்கிவிட்டு, கட்டப்பனாவில் உள்ள ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி வந்து லாரியில் அமர்ந்து ஆசை ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.


சாப்பிடும்போது பாலாஜியின தொண்டையில் பரோட்டா சிக்கியுள்ளது.இதனால் பாலாஜி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தினறியுள்ளார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாலாஜியின் உடல்      உடற்கூராய்விற்காக இடுக்கி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பரோட்டா சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.