சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பணிமனையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, 14வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில், முக்கியத் திருத்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும், அதிகபட்சமாக ரூ. 7,981 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயத்தப்பட்டு கையெழுத்தானது.
-ம.பவித்ரா








