அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!

கேரளாவின் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த 46 வயதான ஆனந்தவள்ளி என்ற பெண்,…

கேரளாவின் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார்.

சி.பி.எம் கட்சியை சேர்ந்த 46 வயதான ஆனந்தவள்ளி என்ற பெண், கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு ரூ.6,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. அவர் தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்துள்ளார்.

சி.பி.எம் கட்சியின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளதாக ஆனந்தக் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அலுவலகத்தை தூய்மையாக வைத்திருப்பதற்காக அவர் ஓடி ஓடி பணியாற்றியுள்ளார். தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளே நுழைந்த அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனக்கு நிறைய பொறுப்புகள் வந்துவிட்டதாகவும், மக்களுக்காக பணியாற்றவிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆனந்தவள்ளி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக இளம் பெண்கள் பலர் முக்கிய பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply