2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி வெளிவந்த பின்னர், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து அட்டவணை வெளியிட்ட பின் பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு பின் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.