முக்கியச் செய்திகள்

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை, மணிமாலா மற்றும் அச்சன்கோவில் உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அதிகனமழை எச்சரிக்கை விடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. கரமணா, நெய்யாறு, மணிமாலா, பம்பை, அச்சன்கோவில், தொடுபுழா, மீனாச்சில், காயத்ரி சளியாறு, பாரதபுழா, பெரியாறு, கொத்தமங்கலம், முவட்டுபுழா ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து

பேருந்து முன்பதிவு: பணத்தை திருப்பி கொடுத்த போக்குவரத்துத்துறை

Arivazhagan Chinnasamy

விருமன்; ‘உங்கள் அனைவரின் அன்பும் எங்களுக்கு வேண்டும்’ – நடிகர் சூர்யா ட்வீட்

Arivazhagan Chinnasamy