கேரள மாநிலம் அட்டப்பாடியில் மதுபோதையில் ஓட்டி வந்த இளைஞர்கள் ஜீப் மளிகைக்கடையில் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடியிலுள்ள இடவாளி பகுதியை சேர்ந்த 7
இளைஞர்கள் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஒரு ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளாவில் அட்டப்பாடி கோட்டத்துறை மருத்துவமனை அருகே வந்த போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அதிவேகமாக சென்று சாலையோரம் மூடியிருந்த மளிகைக்கடை ஷட்டரில் அதி வேகமாக மோதி ஜீப் நின்றது. இதில் ஷட்டர் சேதமடைந்ததுடன் ஜீப்பில் பயணம் செய்த 7 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இன்று காலை கடையை திறக்க வந்த மளிகைக்கடைக்காரர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அருகில் இருந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ம. ஶ்ரீ மரகதம்







