சபரிமலை விவகாரங்களில் அளவுக்கு மீறி தலையிடும் கேரள உயர் நீதிமன்றம் – தேவசம் அமைச்சர் அதிருப்தி…!

சபரிமலை கோயில் விவகாரங்களில் கேரள உயர் நீதிமன்றம் அளவுக்கு மீறி தலையிடுவதாக அம்மாநில தேவசம் அமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கேரளம் மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில தேவசம்துறை அமைச்சர் முரளிதரன் பேசியதாவது: சபரிமலையில் பக்தர்களுக்கோ அரசாங்கத்திற்கோ எந்தப் பங்கும் இல்லை. எல்லாவற்றையும் நீதிமன்றம்தான் தீர்மானிக்கிறது.

சபரிமலையில் எந்த மலர்களைப் பயன்படுத்த வேண்டும், வரிசை எப்படி இருக்க வேண்டும். என்பதைக்கூட உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்கிறது. சபரிமலையில் பக்தர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்பது குறித்த முடிவுகள் கூட உயர் நீதிமன்றத்திடமிருந்தே வருகின்றன.

இத்தகைய விரிவான நீதித்துறைத் தலையீடு அவசியமானதா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. நான் அதைச் சட்டமன்றத்தில் தொடங்கிவிட்டேன். அது இருக்கும்போது யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் வெளிப்படையாகப் பேசினால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.