நடிகை கீர்த்தி சுரேஷ், அழகு சாதனப் பொருட்களுக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’படத்துக்காக தேசிய விருது பெற்றார். இதையடுத்து கவனிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது, தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர், சருமத்தைப் பாதுகாக்க உதவும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக் கும் பூமித்ரா என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கி யுள்ளார்.
சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால், சரும பராமரிப்பு தயாரிப்புகளை இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பூமித்ரா தயாரிப்புகள், இயற்கையானது, நிலையானது மற்றும் சிறப்பான பயனை தருவது’என்கிறார், கீர்த்தி சுரேஷ்!








