கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை வரைபடம் மற்றும் புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
7ம் கட்ட அகழாய்வில் இதுவரை 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள், வெளி நாடுகளால் வணிகம் மேற்கொண்டதற்கான சான்றாக செல்லட்டான், அரிட்டைன் வகை மண் ஓடுகள், அலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை,பகடைகாய், உழவுவிற்க்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, தங்க அணிகலன், வெள்ளி முத்திரை நாணயம், யானை தந்ததிலான பகடைக்காய், சூது பவள மணிகள், நூல் கோர்க்கும் தக்களி, சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி, உறை கிணறுகள், போர் வால் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அகழ்வாராய்ச்சி பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரைபடம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு மூலமாக ஆவணப்படுத்தும் பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.