பாஜக தலைவர் எல்.முருகனைத் தோற்கடித்த கயல்விழி அமைச்சரானார்!

பாஜக தலைவர் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்த கயல்விழி செல்வராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 159-க்கும்…

பாஜக தலைவர் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் தோற்கடித்த கயல்விழி செல்வராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 159-க்கும் அதிகமான இடங்களை பெற்றது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதற்கான விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நாளை நடக்கிறது. புதிய அமைச்சர்களின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் மூத்த அமைச்சர் களுடன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போன்ற புதுமுகங்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரண்டு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கீதா ஜீவன் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். கயல்விழி செல்வராஜ் புதியவர் ஆவார். இவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை, தாராபுரம் தொகுதியில் தோற் கடித்தவர். அதனாலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கயல்விழி செல்வராஜூக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.