தமிழகத்தில் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவுள்ளார். . மேலும் ஆளுநர் மாளிகை புதிய அமைச்சரவை குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 159 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நாளை காலை, 9 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது நீர்வளத்துறை அமைச்சராகவும், கே.என்.நேரு- நகராட்சி நிர்வாகம், ஐ.பெரியசாமி- கூட்டுறவுத்துறை பொன்முடி -உயர் கல்வித்துறை என முக்கிய அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் கீதா ஜீவன் – சமூல நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை , கயல் விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை என 2 பெண் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.







