சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கயல் ஆனந்தி!

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி தற்போது ‘ஒயிட் ரோஸ்’ என்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் அனைத்து நடிகர் – நடிகைகளுமே ரசிகர்கள் மனதில்…

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி தற்போது ‘ஒயிட் ரோஸ்’ என்ற சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் அனைத்து நடிகர் – நடிகைகளுமே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவதில்லை. ஆனால் ஒரு சிலர் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.  அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான, ‘பொறியாளன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ஆனந்தி.

இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் பிரபலமான ஆனந்தி தொடர்ந்து சண்டி வீரன், வெற்றி மாறனின் விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படங்கள், இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருமுனையாக அமைந்தன.

மேலும், ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, தினேஷுக்கு ஜோடியாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, விமலுக்கு ஜோடியாக மன்னர் வகையறா போன்ற பல படங்களில் நடித்தார். இந்நிலையில், ரஞ்சனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் தற்போது ஆனந்தி நடித்து வருகிறார்.

ஜோஹன் ஷெவனேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.