முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“நான் காங்கிரசில் சேருகிறேனா?”- சந்திரசேகர ராவ் மகள் கவிதா விளக்கம்

தாம் காங்கிரசில் சேர முயற்சி எடுத்ததாக பாஜக கூறிய தகவலை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா மறுத்துள்ளார்.

தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சமீபத்தில் தேசிய கட்சியாக அறிவித்தார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என மாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை அமைக்க சந்திர சேகரராவ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக எம்.பி அரவிந்த், சந்திரசேகரராவ் மகள் கவிதா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அக்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார்.

இந்நிலையில் இந்த தகவலை திட்டவட்டமாக கவிதா மறுத்துள்ளார். தெலங்கானாவில் கொண்டு வந்த வளர்ச்சியை நாடுமுழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் இலக்கு எனவும் அக்கட்சியைவிட்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டம் தமக்கு இல்லை என்றும் கவிதா கூறினார். பாஜகவினர் மல்லிகார்ஜூன கார்கேவிடமே தொடர்புகொண்டு பேசி தாம் காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்றும் கவிதா தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கட்சியின் பெயரை மாற்றிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

G SaravanaKumar

தீவிரவாதம் தலைதூக்கினால் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்: தமிழிசை

EZHILARASAN D

கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு – செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Editor