கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.  அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி டெல்லி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் டெல்லி திகார் சிறையில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆனால் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சிபிஐ தெரிவித்துள்ளது.  டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.