காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 5ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அக்கூட்டத்தை
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒத்தி வைத்துள்ளார்.
சென்னை அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் அமைந்த அதானி தனியார் துறைமுகத்தின்
விரிவாக்க பணிக்கு தொடர்ந்து மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுவானது. எனவே வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவிருந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை மீனவர்களின் தொடர்
எதிர்ப்பின் காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி. ஜான் வர்கீஸ் ஒத்தி வைத்துள்ளார்.
காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்திற்கு ஏற்கனவே 330 ஏக்கர் இடம் உள்ள நிலையில் அதனை 6111 ஏக்கர்களாக விரிவாக்கம் செய்ய 3000 ஏக்கர் கடற்பரப்பை நிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ரெ. வீரம்மாதேவி







