‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோ வெர்ஷனை ‘விடுதலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்திற்கு வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
https://twitter.com/sooriofficial/status/1649045617723969543?s=20
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இசையில் உருவான ‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோ வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.







