நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

நேபாளத்தில் உள்ள பொக்ரா  சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற…

நேபாளத்தில் உள்ள பொக்ரா  சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் சென்றது. இந்த விமானம் பொக்ரா விமான நிலையத்தில் ஓடு பாதையிலிருந்து விலகி சென்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முழுவதும் தீ சூழ்ந்து எரிந்து வருகிறது.

68 விமான பயணிகள் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர். விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து 2 பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தியர்கள் 5 பேரும் நேபாளத்தினர் 53 பேரும் இருந்துள்ளனர்.

விமான விபத்து நிகழ்ந்தையடுத்து பொக்ரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.