காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) உள்துறை அமைச்சகம் (MHA) முறையாக ஒப்படைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியுள்ள மூன்று பேர் கொண்ட NIA குழு முதல் தகவல் அறிக்கையை காவல்துறையிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. என்ஐஏவின் தடயவியல் குழு பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரைக் கொன்றனர். அதே நேரத்தில் பலர் காயமடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.