கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்களை கலங்கடித்த தக்காளியின் விலை தற்போது கரூரில் மெல்ல குறைய தொடங்கியுள்ளதால் கரூர் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எகிறிகொண்டே இருந்ததால் அன்றாடம் காய்கறிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ஒரு கிலோ தக்காளியின் விலை 100 முதல் 150 வரையில் விற்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் கரூரில் தக்காளியின் விலை கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 130க்கு விற்பனையான தக்காளியின் விலை இன்று சந்தை நிலவரப்படி 90க்கு விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்களை சற்றே ஆறுதல் அடைய செய்தாலும் மற்ற காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.
ஒரு கிலோ இஞ்சியின் விலை 300க்கும், சீனி அவரை 120க்கும், சின்ன வெங்காயம் 130க்கும் விற்பனை செய்வது பொதுமக்களை மேலும் கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
இதனால் காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்








