வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏ.சி. சேர் கார் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்களில் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏசி இருக்கை வசதி கொண்ட ரயில்களில் கட்டண குறைப்பை அமல்படுத்துவதற்கான அதிகாரம் மண்டல் ரயில்வேதுறைக்கு வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்களில் அனைத்து சேர்கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவுகளில் 25 சதவீத அளவிற்கு கட்டணத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டண சலுகை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.







