கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்ட அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.
கரூர் மாநகர எல்லைப்பகுதிகளில் அமராவதி ஆறு பாய்ந்தோடுகிறது.ஒரு காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதில் பெரும் பங்காற்றிய அமராவதி ஆறு இன்று குப்பைகளால் நிரம்பி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அமராவதி ஆற்றை தூய்மைப்படுத்த முடிவு செய்தனர். இதற்காக பிளாஸ்டி ஒழிப்பு எனும் பெயரில் மாபெரும் தூர்வாரும் பணிகள் இன்று நடைபெற்றது.இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி, ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தன்னார்வலர்கள் 200க்கும் மேற்பட்டோரும் இந்த பணியில் ஈடுபட்டனர். முன்னதாக லைட் ஹவுஸ் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
வேந்தன்








