‘கருப்பசாமி குத்தகைதாரர்’ பட காமெடி ஸ்டைலில் வசூல்… கொத்தாக தூக்கிய போலீசார்!

கருப்பசாமி குத்தகைதாரர் பட காமெடி சீன் பாணியில் இது எங்க ஏரியா எந்த வண்டி நிறுத்தினாலும் கொடுக்கனும் என கூறி பட்டாகத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர்…

கருப்பசாமி குத்தகைதாரர் பட காமெடி சீன் பாணியில் இது எங்க ஏரியா எந்த வண்டி நிறுத்தினாலும் கொடுக்கனும் என கூறி பட்டாகத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகர் பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை அதே பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனபாரதி (எ) பாண்டியராஜன் அங்கு வந்து இங்கு ஆட்டோவை நிறுத்தக்கூடாது என திட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர், தான் இந்த ஏரியா ரவுடி எனவும் பல வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தவன் எனவும் கூறியுள்ளார். மேலும், இங்கு யார் வண்டியை நிறுத்தினாலும் தனக்கு ரூ.200 மாமூல் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். அதனுடன், பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் இது குறித்து கரிமேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கருப்பசாமி குத்தகைதாரர் பட காமெடி ஸ்டைலில் 200 ரூபாய் டோக்கன் போடனும் என கூறி பட்டாகத்தியை காட்டி மிரட்டிய ரவுடி தனபாரதி (எ) பாண்டியராஜனை கரிமேடு காவல்துறையினர் கைது செய்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.