புதுக்கோட்டை மாவட்டம் : கருப்பர் கோவிலில் மது எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயிலில் மதுஎடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயிலில் மதுஎடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 29 ஆம் தேதி
காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மண்டக படிகாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தொடர்ந்து முளைப்பாரிவிழா, பொங்கல் விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றன.

விழாவின் முக்கியநிகழ்வாக மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் கறம்பக்குடி, தட்டாவூரணி, தென்னகர், குளக்காரன் தெரு, அக்ரஹாரம் பகுதிகளில் இருந்து
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது நிலங்களில் குடங்களை அலங்கரித்து அதில் தென்னம்பாளைகளை வைத்து தலையில் சுமந்து கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் உள்ள முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று காசாம்பூ நீல மேணிகருப்பர் கோவிலை சென்றடைந்தனர்.

—-சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.