தனித் தெலுங்கானா அமைவதற்காக தொடர்ந்து போராடியவரும், தன்னுடைய புரட்சிகர வரிகளால் மக்களிடையே விழிப்புணர்வைத் ஏற்படுத்தியவருமான பிரபல பாடகர் கத்தார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
தெலங்கானாவை சேர்ந்த கவிஞரும், பாடகருமான கும்மாடி வித்தல் ராவ். இவர் கத்தார் என்ற பெயர் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த கத்தார், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
1949 ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பல்வேறு கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று பாடல்களைப் பாடி தனது பயணத்தை தொடங்கினார்.
தனி தெலங்கானா மாநிலத்துக்கான தனது ஆதரவை வலுவாக முன்வைத்த கத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்தச் சூழலில் அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்குப் பிரபல தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







