சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான 2ம் நாள் விவாதம் இன்று தொடங்கிய நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி என தெரிவித்தார்.
80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு காலம் திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.
https://twitter.com/KN_NEHRU/status/1430089282815885315
39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.21 ஏக்கர் அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மேம்படுத்தப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் நவீன விளக்கப் படங்களுடன் நினைவிடம் மேம்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







