அஜித்தின் ’வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம் ஐதராபாத்தில் இன்று காலை நடந்தது. பிரபல நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
பிரபல தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா. இவர் RX 100 என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், அஜித்தின் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் அஜித்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாயின. நடிகர் கார்த்திகேயா இப்போது ’ராஜ விக்ரமார்கா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன், ஐதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு, தனது காதலி லோகிதாவை அழைத்து வந்திருந்த கார்த்திகேயா, பத்திரிகையாளர்கள் முன்பு, தரையில் முட்டிப் போட்டு அவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் லோகிதா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21 ஆம் தேதி லோகிதாவை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி அவர்கள் திருமணம் ஐதராபாத்தில் இன்று காலை நடந்தது. பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.