விரைவில் வெளியாகிறது #Karthi-ன் அடுத்த பட அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் காரத்தி நடிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் காரத்தி நடிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும். கடந்த செப்.27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்தி, இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கவுள்ளார். இந்த நிலையில், இவர்கள் இணையும் படத்தின் தயாரிப்பாளரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் இப்படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.